உனக்கென்ன பரிசு
உன்னை பற்றி சொல்வதை தவிர ....
உன் அன்பை அடித்து கொள்ள
இங்கு யாருமில்லை. ..
நீ என்னை அன்பாய் அடித்து கொள்ள
தடையும் இல்லை ..
அன்புமணி ...
நீ பேச்சில் அத்து மீறும்
அழகு நிறுவனம் . . .
உன் மீது வரைமுறையின்றி
வழக்குகள் போடலாம். . .
பத்து நிமிடம் நீ பேசினால்
அது பாட்டி கதைகளாகும்...
பட்டென்று நீ பேசினால்
பல பாஷைகள் புதியதாய் பிறக்கும். . .
பேச்சியம்மா....
கொலைமிரட்டல் விடுகிறேன்
குழந்தை போல சிரிக்கின்றாய். . .
அடி தடி,ஆரவாரம் என்கிறேன்
அடுத்ததை சொல் என்கிறாய்...
இனி மேலாவது என்னை பார்த்து பயப்படு. ...
புன்னகை பேசி பூவாய்
பூக்கிறாய் அனுதினமும் ...
உன் கை பேசி நீயே
பேசி சாகிறது எல்லா கணமும் ..
செல்போன் சிட்டுக்குருவி...
உடைத்தாலும் உண்மையை
காட்டும் கண்ணாடி . .
ஆனால் நீ என்னிடம் உண்மையை மட்டும்
உடைத்து விட்டு பிம்பம்
காட்டிய முதல் பொய் பேசும் கண்ணாடி . .
சோகம் என்றால்
உன் இமைகளுக்கு தாகம் போலும் ..
சட்டென்று கண்ணீர் பாய்ச்சுவாய்...
அடுத்த முறை கண்ணீர் வேண்டாம் ...
உன் சிணுங்கலை கேட்டு தான்
என் காதுகள் சிரிக்கவே கற்று கொண்டது . . .
சிணுங்கல் ராணி . . . .
வில்லங்கம் பிடித்த
வியட்நாம் புகைப்படம்
என் மானம் வெள்ளமாய் போன
அங்காடி தெரு
இவை தான் நமக்கு
இருக்கும் சண்டை ஆயுதங்கள் . . .
எல்லா துன்பங்களும்
தொலையட்டும் உன் வாழ்வில்
எல்லா இன்பங்களும்
கொட்டட்டும் உன் வாசலில் ...
உன் நண்பன் எழுதியது
இதில் புழுதிகள்
ஏதுமில்லை ..
இருந்தால் ஓரம் போடு
பிடித்தால் உன் இருதயத்தில் போடு ...
அன்பு நண்பனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . . . .
No comments:
Post a Comment