மிட்டாய் பேச்சு
மின்மினி..
நீ மெதுவாய்
உடையும் வெண்பனி..
மேகம் பூசிய
முகம்!!!!!
நீ வாசம் மறந்து
பாசம் வீசும்
பூ!!!!!
நீ சிரிப்பை
விதைத்து நட்பை
பறிக்கும் விவசாயி..
நட்பை கடன் கொடுத்து
அளவில்லா அன்பை கேட்கும்
கந்து வட்டிக்காரி..
என் கிறுக்கலையும்
கிறுக்குதனங்களையும்
வண்ணம் கொடுத்து
பார்க்கும் என் ஒவியத்தோழி..
உன் அடம்
பிடிக்கும்
உன்னோடு புகைப்படம்
பிடிக்கும்..
நீ செய்யும்
கேலிகள் பிடிக்கும்.
உன் பற்களின்
வேலிகள் பிடிக்கும்.
உன் கோபத்தில்
சிரிக்கப் பிடிக்கும்..
மொத்தத்தில் உன்னைப்
பற்றி பேசும் பொய்கள்
பிடிக்கும்.
நீ எனக்காக
பேசுகிறாய்..
நான் ஊமையாகிறேன்..
நீ என்னோடு
ந்டக்கிறாய்..
நான் குருடனாகிறேன்..
இது என் நட்பை பற்றிய
ஆசைகள்..
உன் கையில் கொடுக்கிறேன்
முடிந்தால் நிறைவேற்று..
கண்ணீர் வேண்டாம்
மன்னிப்புகள் வேண்டாம்
நட்பென்று உருக்கம் வேண்டாம்.
நொடிகள் என்றாலும்
சிரிப்போடு கடப்போம்...
அன்பு நண்பன்.