Saturday, October 15, 2011

உனக்கும் ஒன்று . . .

ஓடும் பேருந்தில்
ஒளிய வந்த தென்றல் நீ !!!!
உன்னோடு பயணிப்பதில்
உள்ளம் எங்கும் உற்சாகம் . . .

அன்பும் மாறும்
அதன் அர்த்தங்களும் மாறும்
அத்தனையும் மாறாமல்
நம்முளே பூத்துக்கிடக்கிறது
நட்பு . . .

எண்ணங்களில் ஏதும் இல்லை
எதிர்பார்ப்பும் ஏதும் இல்லை
எதற்காக பயம்
என் கை பிடித்து நட
நட்பின் ஆழம் காட்டுகிறேன் . . .

வெயில் மழை புயல் வெள்ளம்
இவையெல்லாம் மிகையாகும்
உன் நட்பை விட்டு
நான் திசை மாறினால் . . . . .

வாழ்க்கை வேறாகும்
நம் துணையால்
நாம் தூரம் போகலாம்
நட்பை தொலைக்காதே
பொருளற்று போகும்
அத்தனை அதிசயங்களும்
அழகான நட்பும் !!!!!

சருகுகள் விழுந்து
பூமியின் உறக்கம்
தொலைவதில்லை . . .
சாகும் வரை
தொடர்ந்தும்
சலனங்கள் கலப்படமில்லை . . .

அடங்காமல் அழுகை வரும்
அன்பு அதிகமானால் !!!!
எனக்கும் வந்தது
அழுகையும் கவிதையும் !!!

No comments:

Post a Comment