Monday, June 4, 2012


இங்கு 
பூவிதழ்கள் மழையில்
இரு இதயங்கள் சேரும் . . .
இரு கைகள் சேர்ந்து 
கடலில் நீரை தேடும்...

கூச்சம் இனி 
இவர்களிடம் கூச்சப்படும். . 
மிச்சம் இல்லா
அன்பும் பகிரப்படும் ...

உனக்கும் எனக்கும் என்பது 
நமக்காகும் . . .
உயிர் கூட இனி 
ஒன்றாகும் ...

சாயந்து கிடக்க 
அவளுக்கொரு தோளும். .. 
செல்லமாய் தூங்க 
அவனுக்கொரு மடியும் 
இனி இலவசமாகும் ...

விடியல் திறக்கும் காலை 
தினம் உங்கள் வாழ்கையை விளக்கும் ...
வாரக்கடைசி வரமாகும் 
வாழ்த்துக்கள் சுகமான பாரமாகும் . . .

நாளுக்கு நாள் 
உங்கள் அழகு கூடும் ..
உங்கள் அனுமதியின்றி 
கண்ணாடி உங்களை தேடும் . . .

இனி உங்கள் வாழ்க்கை 
அழகான கவிதை . . 
உங்கள் சுவரெங்கும் 
புன்னகை பதியட்டும் ...

அல்ல அல்ல 
குறையாத அன்போடு 
ஆயிரமாயிரம் ஆண்டுகள் 
வாழ வாழ்த்துகிறோம் . . .




No comments:

Post a Comment