Monday, April 1, 2013

நீ அச்சு வார்த்த
உருவ பொம்மை.
உன் அழகை சொல்ல ஏன்
உருவகம் உவமை.

பூவை சூடிய பூ
உலகினில் இதுவரை இல்லை.
உனை சூடினால் அது
இனி பூவே இல்லை.

உன் முகமில்லா முகப்புத்தகம்
வரிகள் இல்லா வெறும் புத்தகம்.
பல கணக்கில் நண்பர்கள் இருந்தும்
உன் உற‌வில்லா அதில் என் கணக்கு தேவையில்லை.

நீ தூக்கி எறியும் எதற்கும்
மறுசுழற்சி இல்லை.
உன் கண்கள் தாக்கி எரியும் எதற்கும்
மறுமலர்ச்சி இல்லை.