Sunday, September 19, 2010

அன்பே !

கவனம் சிதறுதே . . . . .
கவலையும் சிதறுதே . . . .
கனவுகள் மட்டும்
கைப்பிடி உறக்கத்தில் . . .

நுனிப்புல் பனித்துளி
எனக்கும் பிடிக்கும் . . .
இனிப்பாய் அவள் சிரித்தால்
அது கூட விண்ணில் பறக்கும் . . .

இரவே வந்தாலும்
இதயங்கள் உறங்குவதில்லை
இறப்பு வரும் வரை . . . .
இறப்பே வந்தாலும்
என் இதயம் உறங்குவதில்லை
அன்பே !
அது உன்னில் உள்ளவரை . . . .!!!!!

Tuesday, September 14, 2010

அனாதையின் வாழ்க்கைச் சுழற்சி

பசியை மறக்க
உணர்ச்சியை விற்றேன்
பணமானது . . . .
கொலையே கூடாதென
கலைக்க மறந்தேன்
கருவானது . . . .
உருவம் வந்தவுடன்
உலகில் உதறினேன்
அனாதையானது . . . .

தன்னைப் பற்றி தானே .....

விலை கொடுத்து வாங்க
என்னிடம் ஏதுமில்லை . . . .
அதனால் நானே விலையாகிறேன் . . . .
--விலைமாது

Wednesday, September 8, 2010

நண்பா . . . .

என் கண்ணீர்
தொலைந்ததும்
என் கனவுகள்
முளைத்ததும்
உன் கைகோர்த்து
நடக்கும் போது தான்......