Monday, June 4, 2012


இங்கு 
பூவிதழ்கள் மழையில்
இரு இதயங்கள் சேரும் . . .
இரு கைகள் சேர்ந்து 
கடலில் நீரை தேடும்...

கூச்சம் இனி 
இவர்களிடம் கூச்சப்படும். . 
மிச்சம் இல்லா
அன்பும் பகிரப்படும் ...

உனக்கும் எனக்கும் என்பது 
நமக்காகும் . . .
உயிர் கூட இனி 
ஒன்றாகும் ...

சாயந்து கிடக்க 
அவளுக்கொரு தோளும். .. 
செல்லமாய் தூங்க 
அவனுக்கொரு மடியும் 
இனி இலவசமாகும் ...

விடியல் திறக்கும் காலை 
தினம் உங்கள் வாழ்கையை விளக்கும் ...
வாரக்கடைசி வரமாகும் 
வாழ்த்துக்கள் சுகமான பாரமாகும் . . .

நாளுக்கு நாள் 
உங்கள் அழகு கூடும் ..
உங்கள் அனுமதியின்றி 
கண்ணாடி உங்களை தேடும் . . .

இனி உங்கள் வாழ்க்கை 
அழகான கவிதை . . 
உங்கள் சுவரெங்கும் 
புன்னகை பதியட்டும் ...

அல்ல அல்ல 
குறையாத அன்போடு 
ஆயிரமாயிரம் ஆண்டுகள் 
வாழ வாழ்த்துகிறோம் . . .




Friday, June 1, 2012


உனக்கென்ன  பரிசு 
உன்னை பற்றி சொல்வதை தவிர ....

உன் அன்பை அடித்து கொள்ள 
இங்கு யாருமில்லை. .. 
நீ என்னை அன்பாய் அடித்து கொள்ள 
தடையும் இல்லை ..
அன்புமணி ...

நீ பேச்சில் அத்து மீறும் 
அழகு நிறுவனம் . . .
உன் மீது வரைமுறையின்றி 
வழக்குகள் போடலாம். . .
பத்து நிமிடம் நீ பேசினால் 
அது பாட்டி கதைகளாகும்...
பட்டென்று நீ பேசினால் 
பல பாஷைகள் புதியதாய் பிறக்கும். . .
பேச்சியம்மா....

கொலைமிரட்டல் விடுகிறேன் 
குழந்தை போல சிரிக்கின்றாய். . .
அடி தடி,ஆரவாரம் என்கிறேன் 
அடுத்ததை சொல் என்கிறாய்...
இனி மேலாவது  என்னை பார்த்து பயப்படு. ...

புன்னகை பேசி பூவாய் 
பூக்கிறாய் அனுதினமும்  ...
உன் கை பேசி நீயே 
பேசி சாகிறது எல்லா கணமும் ..
செல்போன் சிட்டுக்குருவி...

உடைத்தாலும் உண்மையை 
காட்டும் கண்ணாடி . . 
ஆனால் நீ என்னிடம் உண்மையை மட்டும் 
உடைத்து விட்டு பிம்பம் 
காட்டிய முதல் பொய் பேசும் கண்ணாடி . . 

சோகம் என்றால் 
உன் இமைகளுக்கு தாகம் போலும் ..
சட்டென்று கண்ணீர் பாய்ச்சுவாய்...
அடுத்த முறை கண்ணீர் வேண்டாம் ...

உன் சிணுங்கலை கேட்டு தான் 
என் காதுகள் சிரிக்கவே கற்று கொண்டது . . .
சிணுங்கல் ராணி . . . .

வில்லங்கம் பிடித்த 
வியட்நாம் புகைப்படம் 
என் மானம் வெள்ளமாய் போன 
அங்காடி தெரு 
இவை தான் நமக்கு 
இருக்கும் சண்டை ஆயுதங்கள் . . .

எல்லா துன்பங்களும் 
தொலையட்டும் உன் வாழ்வில் 
எல்லா இன்பங்களும் 
கொட்டட்டும் உன் வாசலில் ...

உன் நண்பன் எழுதியது 
இதில் புழுதிகள் 
ஏதுமில்லை ..
இருந்தால் ஓரம் போடு
பிடித்தால் உன் இருதயத்தில் போடு ...

அன்பு நண்பனின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் . . . .