தோல் சாயும் தந்தையிடம்
கிடைக்காதது தோழமையிலும்
கிடைக்கலாம் . . .
ஆம் !
கிடைத்தது உன்னிடத்தில் . . .
உன் முதல் பார்வையிலே
எனக்கு ஒரு சந்தேகம்
முன் பிறவி சிநேகத்தின்
பிரதிபலிப்பு . . .
எதாவது எழுத வேண்டும்
உன்னைப் பற்றி . . .
இது என் இதயத்தின் வேண்டுகோள் . . .
அதிக நாள் பழக்கமும்
அரை நொடியில் தொலைந்து
போகலாம் . ..
ஆனால்
அரை நொடி நட்பும்
ஆயுள் வரை தொடரலாம் . . .
எனகென்னவோ
அப்படிதான் உன் நட்பும் !
ஆயுட்காலம் வரை . . .
இவ்வளவு நாள்
ஆண் பெண் நட்பில்
அதிகம் நம்பிக்கை இல்லை . . .
நம்புகிறேன் இன்று ? . .
நண்பன் அழும் போது
அவன் அழ
உன் கண்களை கொடுப்பதை விட
துடைக்க கைகளை கொடு . . .
சில நேரங்களில் அல்ல
பல நேரங்களில் உன் கைகளை
பார்த்திருக்கிறேன் . .
உன் தாய் ,தந்தை
கொடுத்த நட்பு சுதந்திரம்
நம்பிக்கையின் எவரெஸ்ட் . . .
தலை வணங்குகிறேன் . . .
பல சொந்தங்கள்
பல உறவுகள்
பதிக்கிறது உன் நட்பு
" நினைவுச் சின்னம் "
நட்பு கடலை விட
வானை விட
பெரியது என்பார்கள் . . .
நட்பு புனிதமானது
தெய்வீகமானது
என்பார்கள் . . .அப்படியா ?
இல்லை . .
ஒரு சின்ன
சந்தோஷமான உணர்வு
அடுத்தவர்களுக்காக
நாம் வாழும் வாழ்கை . . .
நீ இதை முழுமை செய்திருக்கலாம் ?
இந்த வரிகளை
நீ வாசிக்கும் போது
உன் இதழ்கள் புன்னகைக்கலாம் . . .
பரவாயில்லை .. .
அதுவும் எனக்கு
ஒரு சின்ன சந்தோஷம் தான் . . .
ஒரு சின்ன வேண்டுகோள் . .
நாட்கள்
வாரங்கள்
மாதங்கள்
வருடங்கள்
நட்புக்கு எல்லை விதிப்பதில்லை . . .
நண்பர்களால் மட்டுமே மறக்கபடுகிறது . . .
மறந்து விடாதே. . . !
மீண்டும் உன்னை போல்
ஒரு உண்மையான நட்பை தேடி . . . .
. . . .அன்பு நண்பன் . . .
Wednesday, March 18, 2009
Sunday, March 15, 2009
அம்மா !
அம்மா.......
என் முதல் அழுகையை பார்த்து
நீ சிரித்தாய்
என்பதற்காக என்னவோ
இன்னும்
அழுது கொண்டிருக்கிறாய்
எனக்காக !
சூரியன்
என் முகம் சுடுமோ என்று
உன் சேலையில்
என் முகம் மூடினாய் . . .
எனக்காக
நடந்து நடந்தே
வறண்டு போன
உன் பாதங்களுக்கு
ஈரம் கொடுக்கிறது
என் கண்ணீர் . . .
இன்னும் நான் சாப்பிடுவேன் என்று
எதிர்பார்த்து எதிர்பார்த்தே
பழையதாகி போன சோறு
உன் தட்டில் ...
அன்றும் எனக்காக கொதித்து
கொண்டிருந்தது கறிக்குழம்பு
அடுத்த வேளைக்கு !. . .
உன் கிழிந்து போன
ஆடையை கூட
கணக்கில் கொள்ளாமல்
என் அலமாரியில்
ஆடைக் கணக்கை
கூட்டினாய். . . .
எத்தனை கஷ்டம்
அத்தனையும் சுமந்து கொண்டு
அழகு சிரிப்பு
சிரித்தாய் எனக்காக !
அம்மா !
அழ நினைக்கிறேன்
எங்கே தாலாட்டும் உன் மடி . . .
எத்தனை பிறவிகள்
வேண்டும் . .
நான் அத்தனையும்
திருப்பி செய்ய . ..
உன் ஜாக்கெட் கிழிசலை விட
என் பாக்கெட் கிழிசல்
உனக்கு எப்படி பெரியதாய் தெரிந்தது . . .?
தூக்கத்தை தொலைத்தாய்
துக்கத்தை மறைத்தாய்
ஏன்?
நான் சிரிக்க வேண்டுமா ?
அம்மா !
என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?
உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய
என்னால் எப்படி முடியும் . . .?
எனக்கென்னவோ சிறிய காய்ச்சல் தான்
உனக்கேன் இப்படி நடுக்கம் . . .
உச்சி வெய்யிலில்
குச்சியாய் போனது உன் தேகம்
ஆனாலும்
ஆலை சங்கொலி கேட்டதும்
அன்பு மகன்
விழித்திருப்பான் என்று
அறை குறை வேலை முடிப்போடு
என் அறை நோக்கி
ஓடி வருவாய் . . . !
காசு போட முடியாமிலிருந்தும்
கடன் வாங்கி உன் மகனுக்கு
ஜீன்ஸ் போட்டு
அழகு பார்த்தாய் . . .
உனக்கென
நான் எழுதியதும்
என் விரல்கள் உதறியதை விட
என் விழிகள் உதறியதே அதிகம் . . .
கண்ணீர் மல்க கேட்கிறேன்
அம்மா . .!
என் ஆயுளில் பாதி எடுத்து
உன் ஆயுளோடு சேர்த்து
எனக்காக என்னோடு வாழ்வாயா?
உன்னைத் தவிர
யாரிடம் தேடுவேன்
இந்த பாசத்தை . . .
. . . .அன்பு மகன் . . .
என் முதல் அழுகையை பார்த்து
நீ சிரித்தாய்
என்பதற்காக என்னவோ
இன்னும்
அழுது கொண்டிருக்கிறாய்
எனக்காக !
சூரியன்
என் முகம் சுடுமோ என்று
உன் சேலையில்
என் முகம் மூடினாய் . . .
எனக்காக
நடந்து நடந்தே
வறண்டு போன
உன் பாதங்களுக்கு
ஈரம் கொடுக்கிறது
என் கண்ணீர் . . .
இன்னும் நான் சாப்பிடுவேன் என்று
எதிர்பார்த்து எதிர்பார்த்தே
பழையதாகி போன சோறு
உன் தட்டில் ...
அன்றும் எனக்காக கொதித்து
கொண்டிருந்தது கறிக்குழம்பு
அடுத்த வேளைக்கு !. . .
உன் கிழிந்து போன
ஆடையை கூட
கணக்கில் கொள்ளாமல்
என் அலமாரியில்
ஆடைக் கணக்கை
கூட்டினாய். . . .
எத்தனை கஷ்டம்
அத்தனையும் சுமந்து கொண்டு
அழகு சிரிப்பு
சிரித்தாய் எனக்காக !
அம்மா !
அழ நினைக்கிறேன்
எங்கே தாலாட்டும் உன் மடி . . .
எத்தனை பிறவிகள்
வேண்டும் . .
நான் அத்தனையும்
திருப்பி செய்ய . ..
உன் ஜாக்கெட் கிழிசலை விட
என் பாக்கெட் கிழிசல்
உனக்கு எப்படி பெரியதாய் தெரிந்தது . . .?
தூக்கத்தை தொலைத்தாய்
துக்கத்தை மறைத்தாய்
ஏன்?
நான் சிரிக்க வேண்டுமா ?
அம்மா !
என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ?
உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய
என்னால் எப்படி முடியும் . . .?
எனக்கென்னவோ சிறிய காய்ச்சல் தான்
உனக்கேன் இப்படி நடுக்கம் . . .
உச்சி வெய்யிலில்
குச்சியாய் போனது உன் தேகம்
ஆனாலும்
ஆலை சங்கொலி கேட்டதும்
அன்பு மகன்
விழித்திருப்பான் என்று
அறை குறை வேலை முடிப்போடு
என் அறை நோக்கி
ஓடி வருவாய் . . . !
காசு போட முடியாமிலிருந்தும்
கடன் வாங்கி உன் மகனுக்கு
ஜீன்ஸ் போட்டு
அழகு பார்த்தாய் . . .
உனக்கென
நான் எழுதியதும்
என் விரல்கள் உதறியதை விட
என் விழிகள் உதறியதே அதிகம் . . .
கண்ணீர் மல்க கேட்கிறேன்
அம்மா . .!
என் ஆயுளில் பாதி எடுத்து
உன் ஆயுளோடு சேர்த்து
எனக்காக என்னோடு வாழ்வாயா?
உன்னைத் தவிர
யாரிடம் தேடுவேன்
இந்த பாசத்தை . . .
. . . .அன்பு மகன் . . .
Subscribe to:
Posts (Atom)