ஆட்சி மாறினால். . . .
கைதியாய் இருந்தவன்
கைது செய்வான் ...
கைது செய்தவன்
கைதியாய் ஆவான் ...
மக்களின் கோரிக்கையும்
தலைவனின் தேர்தல் அறிக்கையும்
எப்படியோ இறக்கைகள்
பொருத்தப்பட்டு வானில்
பறந்து கொண்டிருக்கும் . . .
எங்களிடம் இருந்த
ஒரே ஆயுதம் வாக்குரிமை
எங்களை அறியாமலே
எங்கள் கழுத்தில் குத்திக்கொண்டிருக்கும்
ஆட்சிக்கு வந்தவனின்
அலமாரி திறக்கும்
ஆண்டு முடித்தவனின்
அலமாரி மாட்டிகொண்டு
முழிக்கும் . . .
ஏய் அரசியலே !!!!!!!
எங்களுக்கும் எகிப்துக்கும்
எவ்வளவு தூரம் !!!
புரட்சிக்கு முன்
எச்சரிக்கை !!!
சுதந்திரம்
மறுபடியும் வேண்டும் !!!!!!
இவர்களிடமிருந்து
No comments:
Post a Comment