Wednesday, June 29, 2011

****உன்னைப் பற்றி உனக்காக நான் வரைந்தது******

இனிப்பாய் நீ பேச
சிதைந்த வீடும்
சர்க்கரை கூடு . .

மேகத்தின் அழகை
நீ திருடி விட்டாய் . . .
அதன் மிச்சங்கள் என்னவோ
சோகத்தில் கண்ணீர் விட்டு
மழையாகிறது . . .

உன்னை கோபமாய் பார்த்தாலும்
நீ பல முறை சிரிக்கும்
வரவேற்பறை பொம்மை . . .

உன் ஒருத்திக்காக
மட்டுமே உலகத்தவரை
சிறிது உயரம் குறைக்கலாம். . .
உனக்காக எனக்குள் தோன்றிய
புது யோசனை . .

உனக்கான தனித்திறமை என்ன ?
எதை சொன்னாலும் சிரிப்பதை தவிர . . . .

நீ அர்த்தங்களில்லாமல்
எது பேசினாலும்
அத்தனையும் கவிதை . . .
ஒரு வேளை நான்
செவிடனாய் பிறந்திருந்தால் !!!!!!!

தெளிவாய் நீ பேசினால்
தலை தெறிக்கும் தமிழிலக்கணம் ...

களவாடியவனும்
களவு போனவும்
சந்தோஷப்படுகிற ஒரு தருணம் இது. . .
புரியவில்லையா உனக்கு?
நீ என்னிடம் களவாடியதும்
நான் உன்னிடம் களவு போனதும்
சிநேகிதம்

உறவுகளை நேசி
உன் உலகம் பெரிதாகும்
உண்மையாய் நேசி
உறவுகள் உனதாகும். . .
என்றும் புன்னகையோடு இரு !!!!!!!

No comments:

Post a Comment