உன்னை எப்படி எழுத மறந்தேன். . .
"அம்மா"
எவ்வளவு அழகான கவிதை . . .
ஆயிரம் முறை
லட்சம் முறை
கோடி முறை
வாசித்தாலும் சலிக்காத கவிதை . . . .
வயிற்றில் சிலகாலம்
இடுப்பில் சிலகாலம்
நெஞ்சில் சிலகாலம்
என்னக்காகவே போனது
உன் ஆயுட்காலம் . . .
கணிப்பொறிகளோடு வாழ்க்கை
குளுகுளு அறை
விதவிதமான ஆடைகள்
சொகுசு வீடு
இவையெல்லாம்
உன் கருத்ததேகமும்
பெருத்த கால்வெடிப்பும்
கிழிந்த ஆடையும்
போட்ட பிச்சைகள் . . .
நான் ஊனமாய் பிறந்திருந்தாலும்
ஊட்டி வளர்த்திருப்பாய் . .
தானமாய் கேட்டிருந்தால்
உயிரையும் கொடுத்திருப்பாய் . .
உனக்கென்று கொடுக்க
பெரியதாய் பொருள்
எதுவும்
இந்த பூமியில் எனக்கு
தோன்றவில்லை . ...
உன்னை விட
பெரியதாய் ஒன்றும்
இந்த பூமியில்
இன்னும் தோன்றவுமில்லை . . .
அம்மா
உனக்காக ஒரு நாள்
உன்னை நினைவுபடுத்த அல்ல . . .
உனக்காக நானிருக்கிறேன்
என்று நினைவுபடுத்த . . . .
No comments:
Post a Comment