Sunday, April 11, 2010

உன் பார்வை வேண்டி

மழைத்துளி
குடை தாண்டும்
அவள் உடல் தீண்ட . . . .
புல்வெளி
புதையல் சுமக்கும்
அவள் பாதம் தாண்ட . . . .
அடித்தது புயலோ !!!!
அடிக்கடி குழப்பம்
சிரித்தது அவளோ
நெஞ்சில் மின்மினி பறக்கும் . . .
வெயிலோ கறுக்கும்
அவள் விழி பார்த்தால் . . .
விதையோ பூக்கும்
அவள் ஒரு கணம் சிரித்தால் . . .
படித்தது மறந்தது
காரணம் உன் முகம் தெரிந்தது . .
உன் அழகு
படைத்தத்தில் சிறந்தது
படைத்தவன் சொன்னது . . .
உன் அழகை ரசித்தேன்
ஒருகணம் . . .
என் உள்ளம் சிதைகிறது
அனுதினம் . . .

1 comment: