Sunday, April 11, 2010

" பட்டமளிப்பு விழா "

தொலைத்த நண்பன்
தொந்தரவு ஆசிரியர்
வழியனுப்பிய வகுப்பறை
சோகமாய் காத்திருந்த மரங்கள்
மறுபடி கிடைத்தது அந்த சொர்க்கம்
கட்டியணைத்தான் நண்பன்
கதறாமல் பேசியது கண்ணீர்
வித்தியாசமான ஆடை
சாதனையெல்லாம் பேசிய மேடை
கடைசியில் கை சேர்ந்தது பட்டம் ..
பட்டமும் வாங்கி வந்தோம்
பறக்க விட்டிருந்தால் பறந்திருக்கும்
"பாவம்"
படுத்துறங்கியது என் அலமாரியில்
என் பழைய சான்றிதழ்களோடு ...

1 comment: