Sunday, October 25, 2009

நான்....

எனக்காக நான் வரைந்த என் சுயசரிதை .......
நான்....
வரிகளால் வரையறுக்க முடியாத
ஒரு வார்த்தையில்
ஓர் வரலாறு ....
அழுததில்லை நான்
அணைக்க யாருமில்லை என்பதால்!
வலிகளை வெளிக்காட்டத்தெரியாமல்
இதயத்தில் கொட்டிக் கொட்டி
இரும்பாய் போனதே மிச்சம்!!
எல்லா உணர்வுகளும்
மறந்தே போனது!
சிரிப்பைத் தவிர ..
என்னைச் சுற்றி
நண்பர்கள் கூட்டம் அதிகம்
என்பதை விட....
நல்லவர்கள் கூட்டம் அதிகம்
எனலாம்....
யாருக்கும் தவறு நினைத்ததில்லை
ஆனால்
தவறாய் நினைத்திருப்பேன் . .
சில நேரம் மட்டுமே
அதன் ஆயுட்காலம் ...
சில நேரங்களில்
காக்கைகளும் சீண்டாத
பிணமாய் கிடந்திருக்கிறேன்...
சில நேரங்களில்
பூக்களின் புன்னகையில்
புதைந்து கிடந்திருக்கிறேன்...
தோல்விகள்
என் தோழன்...
ஆனால் நான் தோள் சாய்ந்ததில்லை...
வெற்றிகள்
மன்னிக்கவும்! நான் பழகியதில்லை...
வாழ்க்கை
வாழ்ந்து விடலாம் என்பதில்
நம்பிக்கை அதிகம் .
இதோ நாட்களை
சுமந்து கொண்டு!!
நான்.

No comments:

Post a Comment