கணப்பொழுதில்
அவள் முகம் காட்டி விட்டு
என் இரவெல்லாம்
கனவுகளை நிரப்பி விட்டாய்...
அங்கங்கே அவள் முகம்..
அத்தனையும் அவள் முகம்...
தங்கி விட்டு
செல்வாளா அவள்..
என் நான்கு அறைகளும் காலி
இதயத்தில்..
மின்விசிறிகள் தேவையில்லை
என் சுவாசமே போதும்
அவள் அங்கே உறங்க..
போலிகள் தான்
கவிதைகளாகின்றன...
அவளுக்காக நான்
ஒர் பெயர் வைத்தால்
அது கவிதையை
போலியாக்குவதாகும்..
No comments:
Post a Comment