புதையலாய் இருந்தாலும்
புதைந்து கிடந்தால் தேவையில்லை....
புதைந்து போகாதே
விதையாய் நீ விழு
விடியலாய் முளைத்து வா !!!!
வட்ட பூமி
வாழவா வழியில்லை !!
துவண்டு போகாதே
தோல்விகள் நிலையில்லை....
கரையை தேடாதே
கலங்கரை உள்ளதென
கடலில் கால் வை !!
நமக்கென்று ஓர் திசை
தனியாய் முளைக்கும் ...
உழைப்பை நீ மறந்தால்
பருத்தியும் பாறை தான் ...
கடினமாய் நீ உழைத்தால்
பாறையும் பருத்தி தான் ..
வரலாறு பேசுவதற்காக
வாழ்கையை வரையறுக்காதே!!!
உண்மையாய் நீ வாழு
உன் வாழ்க்கை வரலாறாகும் !!!!
No comments:
Post a Comment